பிளாஸ்டிக் வீடு



இதோ வந்துவிட்டது பிளாஸ்டிக் வீடு. சுமார் 6.12 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து இந்த வீட்டை கட்டியிருக்கிறது ‘ஜே.டி.கம்போசைட்ஸ்’ எனும் கட்டுமான நிறுவனம்.
கனடாவிலுள்ள நோவாஸ்காட்டியாவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, 326 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூறாவளியைத் தாங்கக்கூடிய வலிமை வாய்ந்தது. மழை, வெப்பம், சத்தம் என்று எதுவும் வீட்டுக்குள் நுழைய முடியாது. இது ஒரு சோதனை முயற்சி தான். மனிதர்கள் இந்த வீட்டில் இன்னும் தங்கவில்லை.