வாக்கர் ரோபோ



உங்களின் வாழ்க்கையை இன்னும் வசதியாக்கவும், நவீனமாக்கவும், ஸ்மார்ட்டாக்கவும் வந்துவிட்டது வாக்கர் ரோபோ. எந்திரன்கள் வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ‘UBTECH’-இன் லேட்டஸ்ட் வரவு இது. குடும்பத்துடன் முழுமையாக உங்களின் நேரத்தை  செல  விடு வதற்காக இந்த ரோபோவை தயாரித்திருக்கிறார்கள். அப்படி யானால் வீட்டு வேலைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்கிறீர்களா? அதற்குத்தான் வாக்கர் ரோபோ இருக்கிறார்.

 இரண்டு வருடம் உங்களின் வீட்டு வேலைகளைக் கவனிப்பவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தில் இந்த ரோபோவை வாங்கி விட முடியும். பிறகு இருபது வருடங்களுக்கு சம்பளமே கொடுக்காமல் இந்த ரோபோ 24 மணிநேரமும் உங்களுக்காக உழைக்கும். சார்ஜ் மட்டும் செய்துவிட்டால் போதும். ரோபோ என்ற உணர்வே தெரியாமல் இருப்பதற்காக மனித தோற்றத்தில் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

மார்பிள் தரை, கார்பெட், மரம் என எதன் மீது வேண்டுமானாலும் வாக்கர் ரோபாவால் நடக்க முடியும். அத்துடன் இதன் கைகளை மனிதர்களைப் போல எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். முக்கியமாக வீட்டிலுள்ள அனைத்து வகையான ஸ்மார்ட் டிவைஸ் களையும் துல்லியமாக இந்த ரோபாவால் இயக்க முடியும். நாம் இயக்கினால் அது பழுதாக வாய்ப்புண்டு.  இதன் கால்களை இடத்துக்குத் தகுந்த மாதிரி பேலன்ஸ் செய்ய முடியும். மனிதர்கள் கூட சில நேரங்களில் கண்ணாடி டம்ளர்களைக் கீழே தவறவிட்டு விட்டு உடைத்துவிடுவார்கள்.

ஆனால், இந்த ரோபோ ஒருபோதும் அப்படிச் செய்யாது. மனிதர்களைக் காட்டிலும் வீட்டு வேலைகளை இதனால் சுலப மாக, சரியாகச் செய்ய முடியும். அத்துடன் உங்களை உற்சாகப் படுத்த பியானோ வாசிக்கவும் வாக்கர் ரோபோவுக்குத் தெரியும். எழுத்து, பேச்சு, சைகை என எந்த வழியில் வேண்டுமானாலும் வாக்கர் ரோபோவுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பது இதன் ஹைலைட்.