போரா போரா
‘பசிபிக் பெருங்கடலின் முத்து’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் தீவு போரா போரா. பிரெஞ்ச் பொலினீஸியாவில் சுமார் 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இத்தீவில் 11 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அரிதான முத்துகளாலும் பவளங்களாலும் சூழ்ந்துள்ள இந்தத் தீவில் தண்ணீருக்கு மேல் அழகழகான குடில்களை அமைத் திருக்கின்றனர். அங்கே தங்கி கடலின் அழகையும் தீவின் வசீகரத்தையும் ரசிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் போரா போராவை நோக்கி படையெடுக்கின்றனர்.
|