தண்ணீர் பஞ்சம்



உலகமெங்கும் தண்ணீர் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது. ‘‘சுமார் 200 கோடிப் பேர் அசுத்தமான குடிநீரைக் குடித்து வருகின்றனர். அவர்கள் குடிக்க சுகாதாரமான குடிநீர் இல்லை. அதனால் அடிக்கடி அவர்கள் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது...’’ என்று ஐ.நா.வின் சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தண் ணீர் தட்டுப்பாடு நிலவும்சூழலில் ஐ.நா.வின் ஆய்வு பீதியைக் கிளப்பியுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தது ஐ.நா. அதன் அடிப்படையிலே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. தவிர,  உலகம் முழுவதும் சுமார் 65 கோடிப் பேர் திறந்த வெளியில் மலம் கழித்து வருவதாகவும், இது பலவிதமான சிக்கல்களை உண்டாக்குவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.