டெக் புதுசுஸ்மார்ட் எல்இடி டி.வி

மிகக்குறைந்த விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டி.வியை சந்தையில் இறக்கியுள்ளது ‘தாம்சன்’ நிறுவனம். 4K வீடியோ, ஹெ.டி.ஆர். டிஸ்பிளே,  நெட்பிலிக்ஸ், ஹாட் ஸ்டார், யூடியூப் போன்ற ஆப் வசதி, 20 வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம், யூஎஸ்பி கனெக்டிவிட்டி என்று கலக்குகிறது இந்த டி.வி. எடை குறைவு இதன் சிறப்பு. ஆன்லைனில் இதன் விலை ரூ.20,999.

ஒயர்லெஸ் ஹெட்போன்

‘ப்ளாபங்ட்’ நிறுவனம் ‘BH01’ என்ற ஒயர்லெஸ் ஹெட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புளூடூத் வசதியுள்ள அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களுடனும் இதனை இணைத்துக்கொள்ள முடியும். 300mAh திறன்கொண்ட பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 10 மணி நேரத்துக்கு இடைவிடாமல் இயங்குகிறது இந்த ஹெட்போன். விலை ரூ.1,699.