முத்தாரம் லைப்ரரிQuick Cooking
By Mary Berry
சமையல் கலையைப் பற்றி லட்சக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்தாலும் அதற்கான மவுசு இன்னும் குறையவில்லை என்பதற்கு உதாரணம்  இந்தப் புத்தகம். இது 20-30 நிமிடங்களுக்குள் தயாராகிற ருசியான உணவுகளைப் பட்டியிலிடுகிறது. 120 ரெசிபிகள், வண்ண வண்ணப் படங்கள் என்று அசத்தும் இந்தப் புத்தகம் வெளியான இரண்டு வாரத்தில் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
 
The Salt Path
By Raynor Winn
ஒரு புகழ்பெற்ற வாக்கர், ரெய்னர் வின். அவரின் கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. தேவையற்ற முதலீடுகளால் வீட்டை இழக்க நேரிடுகிறது. இந்தத் துயரங்களிலிருந்து விடுபட கணவரை அழைத்துக்கொண்டு 630 மைல்கள் நடந்திருக்கிறார் ரெய்னர். அதுவும் கடலை ஒட்டிய பகுதிகளில். அந்த அனுபவங்கள் தான் இந்தப் புத்தகம்.