டெக் புதுசு



லேப்டாப்

‘லெனோவா’ நிறுவனத்தின் புதிய லேப்டாப்பான ‘ஐடியாபேட் S540’ என்ற மாடல் அடுத்த மாதம் சந்தையில் இறங்கவுள்ளது. கிராஃபிக்ஸ் வேலைகளுக்காக இதை பிரத்யேமாக வடிவமைத்திருக்கிறார்கள். 15.6 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் மெமரியை நீட்டித்துக்கொள்ளும் வசதி என அசத்துகிறது இந்த லேப்டாப்.

ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டால் 12 மணி நேரத்துக்குக் கவலையில்லை. 1.8 கிலோ எடையுள்ள இந்த லேப்டாப்பை எங்கு வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துக்கொண்டு போக முடியும். விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
 
ஒயர்லெஸ்  ஹெட்போன்

மலிவு விலையில் ஒயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது ‘போட் ராக்கர்ஸ்’. புளூடூத் வசதியுள்ள லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்பீக்கர்களுடன் இந்த ஹெட்போனை இணைத்துக்கொண்டு நாம் விரும்பிய பாடல்களைக் கேட்கலாம். 300mAh திறன் கொண்ட பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 8 மணிநேரம் இடைவிடாமல் இயங்குகிறது. விலை. ரூ.1,799