முத்தாரம் லைப்ரரி



How to Be a Footballer
By Peter Crouch
இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்து ஆட்டக்காரர் பீட்டர் கிரவுச். ‘‘2018-ம் ஆண்டின் விளையாட்டு சம்பந்தமான சிறந்த புத்தகம்...’’ என்று ‘சண்டே டைம்ஸ்’ இப்புத்தகத்தைக் கொண்டாடுகிறது. தன் வாழ்க்கையினூடாக கால்பந்து விளையாட்டு வீரனுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் பீட்டர். ஆங்காங்கே நகைச்சுவை ததும்புவது இதன் சிறப்பு. விற்பனையிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது இந்தப் புத்தகம்.

How to Give Up Plastic
By Will McCallum
தலைப்பே புத்தகம் எதைப் பற்றியது என்று சொல்கிறது. ‘‘ஒவ்வொரு வருடமும் சுமார் 13 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலக்கின்றன. இது பத்து லட்சம் கடல் பறவைகளையும், ஒரு லட்சம் கடல் வாழ் உயிரினங்களையும் அழிக்கிறது. 2050-இல் கடலில் இருக்கும் மீன்களின் எடையைவிட கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடை அதிகமாக இருக்கும்...’’ என்ற தகவல் தான் இந்தப் புத்தகத்துக்கான எல்லா விளம்பரங்களிலும் எதிரொலிக்கிறது.