உலகின் மிகப்பெரிய டெடி பியர்!குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு பொம்மை, டெடி பியர். ஆனால், இந்த டெடி பியரை குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர் களால் கூட தூக்கிக் கொஞ்ச முடியாது.
ஆம்; இதன் நீளம்  20 மீட்டர். எடை 4 டன். மெக்சிகோவில் உள்ள ஸோனாகட்லான் என்ற இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த டெடி பியருக்கு ‘ஸோனிட்டா’ என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.

இதை உருவாக்க மூன்று மாதங்கள் ஆகியிருக்கிறது.  ‘உலகின் மிகப்பெரிய டெடி பியர்’ என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துவிட்டது ஸோனிட்டா. இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு டெடி பியர் இந்தச் சாதனையை தன்வசம் வைத்திருந்தது. அதன் நீளம் 16.86 மீட்டர்.