கின்னஸ் சாதனை



நல்ல விளைச்சல் வேண்டியும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் கோன்யாக் நாகா என்ற பழங்குடி மக்களால் ‘ஆவோலியாங் மோன்யூ’ என்ற திருவிழா கொண்டாடப் படுகிறது.
ஏப்ரல் முதல் வாரத்தில் அரங்கேறும் இத்திருவிழாவில் கோன்யாக் நாகாவின் பாரம்பரிய நடனமும், இசையும் ரொம்பவே ஸ்பெஷல். இந்த முறை 4,700 கோன்யாக் நாகா பெண்கள் ஒரே இடத்தில் 5.1 நிமிடம் இடைவிடாது தங்களது பாரம்பரிய நடனத்தை அரங்கேற்றி விழாவைச் சிறப்பித்தனர். இந்த நடனம் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டது.