ஒயின்பாக்ஸ் ஹோட்டல்



சிலியின் முக்கிய நகரம் வல்பரைசோ. அங்கே கடலை நோக்கி வீற்றிருக்கிறது ஒயின்பாக்ஸ் ஹோட்டல். மேற்கத்திய நாடுகளில் வீடு கட்ட செலவு அதிகம். அதனால் ஏழ்மையில் வாடும் மக்கள் கன்டெய்னர்களையே  வீடுகளாகப்  பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது
கன்டெய்னர் கலாச்சாரம் ஹோட்டல் துறையையும் பற்றிக்கொண்டது.

ஆம்; வேண்டாமென்று தூக்கியெறியப்பட்ட 25 கன்டெய்னர்களைப் பயன்படுத்தி ஒயின்பாக்ஸ் ஹோட் டலை வடிவமைத்திருக்கிறார்கள். கலர்ஃபுல்லாகக் காட்சியளிக்கும் இந்த ஹோட்டலில் தங்க வேண்டும் என்றால் ஒரு மாதத்துக்கு முன்பே புக்செய்ய வேண்டும்.