உலகத்தைச் சுற்றிய தோர்



அக்டோபர் 10, 2013 அன்று டென்மார்க்கிலிருக்கும் தனது வீட்டை விட்டு உலகைச் சுற்றி வர கிளம்பினார் தோர். இதற்காக கப்பல் நிறுவனத்தில் 12 வருடமாக பார்த்து வந்த பணியைக் கூட ராஜினாமா செய்துவிட்டார். உலகை நிறைய பேர் சுற்றி வந்துவிட்டார்கள். அவர்கள் செய்தது மாதிரியே திரும்பச் செய்வதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்பதை உணர்ந்த தோர் வித்தியாசமாக உலகைச் சுற்ற நினைத்தார்.

அதன்படி விமானத்தில் பயணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 24 மணி நேரம் தங்க வேண்டும். பயணத்தை முடிக்கும் வரைக்கும் வீட்டுக்குத் திரும்பி வரக்கூடாது என்று சில நிபந்தனைகளைத் தனக்குத் தானே விதித்துக்கொண்டார்.

இன்று விமானத்தைப் பயன் படுத்தாமல் உலகைச் சுற்றி வந்த முதல் நபர் என்ற சாதனையைப் புரிந்துவிட்டார் தோர். ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது பெரும்பாலும் நடந்தே சென்றிருக்கிறார். கார், டூவீலரில் லிஃப்ட் கேட்டும், கப்பலிலும் அதிகமாக பயணம் செய்திருக்கிறார். இப்படி ஐந்து வருடங்களில் 168 நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டார் தோர்.