வைரல் சிறுவன்



அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் உரையாற்றும்போது தூங்கி விட்ட சிறுவன் ஜோஸ்வா டிரம்ப்தான் டுவிட்டரில் செம வைரல். ஒரே நாளில் இணையவாசிகளின் ஹீரோவாகிவிட்டான் அந்தச் சிறுவன். ‘‘அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த  மனநிலையை  ஜோஸ்வா பிரதிபலிக்கிறான்...’’ என்று சிறுவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

ஜோஸ்வாவின் கடைசி பெயராக டிரம்ப் இருப்பதால் பள்ளியில் அவனை எல்லோரும் கிண்டலடித்துள்ளனர். பெரும் மன உளைச் சலுக்கு உள்ளான டிரம்ப் பள்ளியை விட்டே நின்றுவிட்டான். இப்போது ஹோம் ஸ்கூலிங் வழியாக கல்வி கற்று வருகிறான்.

இந்தச் சூழலில் அவனின் பெயர் காரணமாக ‘ஸ்டேட் ஆஃப் யூனியன்’ உரையாற்றும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள ஜோஸ்வாவிற்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இத்தனைக்கும் ஜோஸ்வாவின் வயது 11 தான்.அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியாவின் அருகில் அமர்ந்து டிரம்ப்பின் உரையைக் கேட்ட ஜோஸ்வா சில நிமிடங்களில் தூங்கிவிட்டான். அவன் தூங்கியதை யாரோ ஒருவர் கிளிக்கி டுவிட்டரில் பதிவிட, வைரலாகிவிட்டான் ஜோஸ்வா டிரம்ப்.