முத்தாரம் லைப்ரரி



Bad Blood: Secrets and
Lies in a Silicon Valley
Startup
By John Carreyrou

உலகின் கம்ப்யூட்டர் தொழில்புரட்சியின் மையமாக விளங்கும் சிலிக்கான் வேலியின் ரகசியங்களை, குற்றங்களை, தவறு களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இப்புத்தகம். குறிப்பாக டிஜிட்டல் வளர்ச்சியை கடுமையாக விமர்சிக்கிறார் இதன் ஆசிரியர். ஒரு உளவாளி போல சிலிக்கான் வேலிக்குள் புகுந்து பல வருடங்கள் அலைந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் அவர்.

Cleopatra, A Life, by Stacy Schiff

வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெண் ஆளுமை கிளியோபாட்ரா. இவரைப் பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும் இப்புத்தகம் தனித்தன்மையுடன் விளங்குவதாக பத்திரிகைகள் பாராட்டுகின்றன. புத்தகத்தின் ஆசிரியர் வரலாற்றை சுவாரஸ்யமாக எழுதுவதில் கைதேர்ந்தவர்.