டெக் புதுசு



மியூசிக் பிளேயர்

‘ஃபியோ’ நிறுவனம் முதல் முறையாக பாக்கெட் மியூசிக் பிளேயரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு தாங்கும் பேட்டரி திறன், அழகான வடிவமைப்பு என அசத்தும் இந்த பிளேயரின் விலை ரூ. 14,990.

லேப்டாப்

15.6 இன்ச் ‘OLED’ டிஸ்பிளேவுடன் கண்ணாடி போல பளபளக்கும் லேப்டாப்பை சந்தையில் இறக்கியுள்ளது ‘சாம்சங்’. கேமிங், கிராபிக் டிசைனுக்காக பிரத்யேகமாக இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒயர்லெஸ் சார்ஜர்

உலகின் அதிவேகமான ஒயர்லெஸ் சார்ஜரை ‘ஹுவாய்’ நிறுவனம் களமிறக்கியுள்ளது. இதில் எந்த போனை வேண்டுமானாலும் சார்ஜ் செய்துகொள்ளலாம். அமேசான் தளத்தில் இந்த சார்ஜர் கிடைக்கிறது. விலை
ரூ. 3,999.