டுவிட்டரில் ஏன் எடிட் வசதியில்லை?



ஏன்? எதற்கு? எப்படி?

டுவிட்டரின் தனித்தன்மையே அதில் நீங்கள் செய்யும் பதிவை எடிட் செய்ய  முடியாது என்பதுதான். உங்களின் பதிவில் தவறு நேர்ந்துவிட்டால் அதை முழுவதுமாக நீக்கத்தான் முடியும். அதனால் தான் டுவிட்டர் பதிவுகள் அடிக்கடி சர்ச்சையைக் கிளப்புகின்றன. எஸ்.எம்.எஸ். சேவையை அடிப்படையாக வைத்து உருவானதுதான் டுவிட்டர்.

உங்களின் நண்பருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ எஸ்.எம்.எஸ்ஸை ஒருமுறை அனுப்பிவிட்டால் அதை நீங்கள் திரும்பப் பெறமுடியாது. இதுபோலத் தான் டுவிட்டரில் நீங்கள் இடுகிற ஒவ்வொரு பதிவும். பயனாளிகளின் வேண்டுகோளுக்கு இணங்க  எடிட் வசதியைக் கொண்டுவருவது பற்றி பரிசீலனை செய்துவருகிறது டுவிட்டர்.