5G மோடம்



கண் இமையை மூடித் திறக்கும் சில  நொடிகளில் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப் படம் டவுன்லோடு ஆகிவிடும்.  அதுவும் ஹெச்.டி. தரத்தில். மெயிலில் புகைப்படங்களை, ஆடியோ, வீடியோக்களை  அப்லோடு செய்ய மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியதில்லை.
சில நொடிகளில்  அப்லோடு ஆகி சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிடும். 4ஜி நெட்வொர்க்கின்  வேகத்தை விட ஆயிரம் மடங்கு வேகம் அதிகம். அதாவது 10Gbps.  ‘5ஜி’  நெட்வொர்க்கைப் பற்றித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்தத்  தலைமுறையால் சுலபமாக ஊகித் திருக்க முடியும்.

கடந்த வருடம்  ‘சாம்சங்’ நிறுவனம் ‘5ஜி’ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினாலும் அது  பெரிதளவில் சந்தைப்படுத்தப்படவில்லை. காரணம், அது ஒரு பரிசோதனை முயற்சியாகவே  இருந்தது. ஆனால், ‘ஹுவாய்’ நிறுவனம் அதிரடியாக ‘5ஜி’ மோடத்தை களமிறக்கியதோடு மட்டுமல்லாமல், 5ஜி நொட்வொர்க்கில் இயங்கும் ஸ்மார்ட்  போனையும் வெளியிட்டுள்ளது. இந்த போனின் ஸ்க்ரீனை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால்,  வேகம் 4.6 Gbps மட்டும்தான்.