பிளாசிபோ மனம்!தொண்ணூறுகளிலிருந்து வளர்ந்துவரும் ‘பிளாசிபோ’ மருந்துகள் (சர்க்கரை மாத்திரைகள்) உளவியல் ரீதியாக நோயாளிகளைக் குணமாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. 2005 -15 காலகட்டத்தில் வலி நிவாரணிகளைவிட பிளாசிபோ மாத்திரைகள் தான் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் 46 சதவிகித மருத்துவர்கள் பிளாசிபோ மாத்திரைகளையே நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். தற்போது உடல்நலப்பிரச்னை தீவிரமாவதை நாஸிபோஸ் (Nocebos) என்று குறிப்பிடுகின்றனர்.

பதினான்காம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயத்திலி ருந்து ‘பிளாசிபோ’ என்ற வார்த்தை பிறந்தது. இறந்தவர் களின் இறுதிச்சடங்கில் பாடும் பாடல்களிலிருந்து  இவ்வார்த்தை உருவானது. விஞ்ஞானி பெஞ் சமின் ஃபிராங்களின்தான் முதல் பிளாசிபோ சோதனையைச் செய்தவர். 1889-இல் ‘Elixir’ என்ற மாத்திரையை இங்கிலாந்து மருத்துவரான சார்லஸ் ப்ரௌன் செக்வார்டு தயாரித்து விற்கத்தொடங்கினார்.

1995-இல் ஹென்றி பீச்சர், ‘தி பவர் ஆஃப் பிளாசிபோ’ என்ற நூலைப் பதிப்பித்து உலகெங்கும் இம்மாத்திரைகளைப் பிரபலப் படுத்தினார். 2011  முதல் ஹார்வர்டு பல்கலைக்கழகம் பிளாசி போ தொடர்பான பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறது.