சமந்தா



கனடாவைச் சேர்ந்த சமந்தா அன்னா பீ (1969), காமெடி நடிகை,  முதல்  பெண் டிவி  நிகழ்ச்சி தொகுப்பாளரும் கூட. லேட்நைட் ஷோ வித் ஜான் ஸ்டூவர்ட் நிகழ்ச்சியை முதல் பெண் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி பிரபலப்படுத்தியவர். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கென தனி ஷோவை அமைத்துக்கொண்ட திறமைசாலி.  

“சிறுவயதில் கூச்சசுபாவி யாகவும், முதிர்ச்சியான வளாகவும் காட்டிக் கொள்ள முயற்சித்தேன்” என்பவர் பெற்றோர் பிரிவுக்குப் பிறகு பாட்டி யிடம் வளர்ந்தார்.  ஒட்டாவா பல்கலைக்கழகம், ஜார்ஜ் ப்ரௌன் நாடகப்பள்ளி ஆகியவற்றில் படித்த சமந்தாவுக்கு நாடகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ‘Sailor Moon’ நாடகம் இவர் திறமை மீது வெளிச்சம் பாய்ச்ச, அடோமிக் ஃபயர்பால் எனும் பெண் நாடகக் குழுவிலும் இயங்கினார்.  

2003 இல் டிவி ஷோவில் முதல் பெண்தொகுப்பாளராக மேடையேறி சாதித்தார். ”சிறந்த ஐடியாக்களை கூறுவதற்கான சவாலை மகிழ்வோடு ஏற்றேன். உங்களிடம் எதிர்காலத்திற்கான சிந்தனைகள் இருந்தால், அதனை சாதிக்க உதவும் மனிதர்கள் இயல்பாக உங்களோடு இணைவார்கள். நீங்கள் செய்யும் பணியை மனதார ஏற்று ஈடுபடுங்கள்” என்கிறார் சமந்தா. சாதித்தவரின் சத்திய வார்த்தை!