நாஜி எழுச்சி - ஐன்ஸ்டீன் அதிர்ச்சி!



1922 ஆம் ஆண்டு  ஜெர்மனி யில் தங்குமிடத்தை வெளிப்படுத்தாமல் வாழ்ந்தபடி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் கீடம் ஏலநிறுவனத்தின் மூலம் 39,360 டாலர்களுக்கு (ரூ.27,71,750.88) விலைபோயுள்ளது. 
அக்காலகட்ட நாஜிக்களின் எழுச்சியை பயத்துடன் எழுதி விளக்கிய ஐன்ஸ்டீன் இக்கடிதத்தை, தனது சகோதரி மாஜாவுக்கு அனுப்பினார். கடிதம் எழுதிய சூழலில் ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச் சரும் யூதருமான வால்தர் ரதினாயூ வலதுசாரி தீவிரவாத கும்பலால் கொல்லப்பட்டிருந்தார்.

போலீஸ் இதற்கு முன்பாகவே உங்கள் உயிர் உங்கள் பொறுப்பு என்று பொறுப்பு துறப்பு அறிவிப்பை வெளியிட்டதால் ஐன்ஸ்டீன் அக்கடிதத்தில் தனது இருப்பிடத்தை தெரிவிக்கவில்லை. “பலரும் என்னை காணவில்லை என்றே நினைப்பார்கள்” என கடிதம் ஏற்படுத்தும் உணர்வையும் துல்லியமாக கடிதத்தில் பதிவு செய்துள்ளார் ஐன்ஸ்டீன்.

ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட ஐன்ஸ்டீன், நாஜிக்களை ஒழிக்கும் திட்ட முடைய ஹிட்லர், ஜெர்மனியின் தலைவரானவுடன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். நியூஜெர்சியின் பிரின்ஸ்டன் நகரில் குடியுரிமை பெற்றதும் ஜெர்மனி குடியுரிமையைக் கைவிட்டார்.