சூழலுக்கு உதவும் பாக்டீரியா!



பாக்டீரியாக்கள் இல்லாத இடம் ஏது? அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ரிச்சர்ட்சன் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி கழிவுகளை அழிக்க மைக்ரோபைர் என்ற தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக பயிற்சிதர முயற்சித்து வருகிறார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த சாரா, கழிவுகளை அழிக்க பாக்டீரியாக்களை விலங்குகளைப் போல பழக்கப்படுத்த முயன்று வருகிறார்.

உலகில் ஆண்டு தோறும் தேங்கும் 11.2 பில்லியன் திடக்கழிவுகள் அனைத்தையும் மறுசுழற்சி செய்யமுடியாது. இதற்கான தீர்வு களாக இப்போது பாக்டீரியாக்களை ஆராய்ச்சி யாளர்கள் நம்புகின்றனர். “ஓட்ஸிலிருந்து நைலான் இழைகள் முன்னர் தயாரிக்கப்பட்டன. நாம் பாக்டீரியாக்களை இதுபோல பயன்படுத்தினால் சூழலுக்கும் பிரச்னை கிடையாது” என்கிறார் சாரா ரிச்சர்ட்சன். பெட்ரோலியத்தை விட மலிவான விலையில் பாக் டீரியாவை உருவாக்குவது சாராவின் பிளான்.  

மேரிலேண்ட் பல் கலையில் உயிரியல் படித் தவர், மரபணு மற்றும் மூலக்கூறு உயிரியல் படிப்பை ஜான் ஹாப் கின்ஸ் கல்லூரியில் நிறைவு செய்தார். தற்போது செயற்கை இழைகள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கி வேதிப்பொருட்களின்ஆக்கிரமிப்பை குறைக்க முயற்சித்து வருகிறார்.