ஒருவரின் குரலை ஸ்பீக்கர் வழியாக கேட்கும்போது குரலின் தன்மை மாறுபடுவது ஏன்?



ஏன்? எதற்கு? எப்படி?

எந்த உடல் உறுப்புகளை நாம் இழந்தாலும் பிறருடையதோ, அல்லது செயற்கையாகக் கூட தயாரித்து பொருத்திக்கொள்ளமுடியும். ஆனால் குரலுக்கு மட்டும் ஆப்ஷனே கிடையாது. அவரவருக்கு என்ன வாய்க்கிறதோ அதுவேதான். அப்படிப்பட்ட குரலை பிறரோடு பேசும்போது சகிக்கும் நாம், ஸ்பீக்கர்களில் ரெக்கார்ட் செய்தபின் கேட்டால் சகிக்க முடியாது.

உச்சஸ்தாயியில் ஒலிக்கும் குரலின் தன்மையே அதற்குக் காரணம். குரல் நமது ஆளுமையின் வெளிப்பாடு என்பதால் பொது இடங்களில் பேசும் பலரும் ஸ்பீக்கர்களில் தான் பேசும் ஒலியைக் காதில் கேட்டு பயப்பந்து வயிற்றில் உருள நாக்கு மேலண்னத்தில் ஒட்ட முதலில் தடுமாறிப் பேசி பிறகு சமாளித்துக்கொள்கின்றனர்.

Mr.ரோனி