இ-வாகனங்களில் வாய்ப்பு!



ஸ்டார்ட் அப் மந்திரம்-28

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்திய அரசு ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட்டில் முன்னணி வகிப்பது ஆம்பியர் நிறுவனம். “நாங்கள் முதலில் சீனாவிலுள்ள பேட்டரி நிறுவனத்தை அணுகினோம்.

பின்னர் இந்தியாவிலுள்ள சன் நிறுவனம் எங்களுக்கான லித்தியம் அயான் பேட்டரியை குறைந்தவிலையில் வேகமாக தயாரித்து தர ஒப்பந்தம் செய்தோம்” என்கிறார் ஆம்பியரின் நிறுவனரான ஹேமலதா.

பேட்டரி வாகனங்களைப் புரிந்துகொள்ளாதவர்கள் இதில் உடனடியாக முதலீடு செய்ய வாய்ப்பில்லை என்பதை தெரிந்து கொண்ட சன் மொபிலிட்டி நிறுவனத்தை தொடங்கியுள்ளார் சேட்டன் மைனி. அசோக் லேலண்டின் மின் காருக்கான பொறுப்பை சன் மொபிலிட்டி ஏற்றிருக்கிறது.  

இந்திய அரசு 2030 க்குள் நூறு சதவிகித பொதுப்போக்குவரத்தும், தனியார் போக்குவரத்தில் 40% வளர்ச்சியையும் எதிர்பார்க்கிறது. இ-வாகனங்கள் சந்தையில் பெட்ரோல் அல்லது டீசல் ஹைபிரிட் வகை ஆராய்ச்சியை ஆல்ட்க்ரீன் டெக்னாலஜி நிறுவனமும், மின் கார்களுக்கான முயற்சியை மஹிந்திரா ரேவாவும் முன்கூட்டியே செய்தது. இதன் பேட்டரியை லித்தியம் அர்பன் டெக்னாலஜிஸ் உருவாக்கியது. பெட்ரோல் -டீசலுக்கு மாற்றாக இ-வாகனங்கள் முன்னேற பெரும் தடையாக இருப்பது பேட்டரி - எஞ்சின்கள்தான்.  

சைரி சாஹலின் sheroes என்ற கம்பெனி இணையத்தில் பெண் களுக்கான வேலைவாய்ப்பு தகவல்களை அளிக்கிறது. 1999 ஆம் ஆண்டு எம்.பில். முடித்த சாஹல், கப்பல்படை வீரர்களுக்கான பத்திரிகையை நடத்தினார். அதன் பின்பு பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த சிந்தனையில் தொடங்கியதே ஷெரோஸ் ஆன்லைன் தளம்.

வளர்ச்சி!  

இணையத்தில் இந்தியா வளர்ச்சி- 13%   
சீனாவின் வளர்ச்சி விகிதம் - 910 மில்லியன் (2010), 740 மில்லியன் (2017)  
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் -720 மில்லியன் (2010), 500 மில்லியன் (2017)  
அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் - 310 மில்லியன் (2010), 290 மில்லியன் (2017)

இ-வணிகம் பாய்ச்சல்!  

2017 ஆம் ஆண்டு வளர்ச்சி - 50 மில்லியன்  
2020 ஆம் ஆண்டு வளர்ச்சி - 120 மில்லியன்  
இ - வணிகத்தின் வளர்ச்சி விகிதம் - 25%  
2020 ஆம் ஆண்டு மதிப்பு - 100 பில்லியன் டாலர்கள்.

(உச்சரிப்போம்)

கா.சி.வின்சென்ட்