கொலைப்பசி!



Joseph James DeAngelo (1945-)  
கொலை(13), கொள்ளை(120), கற்பழிப்பு (50) என கலிஃபோர்னியா போலீசை ஓவர்டைம் பார்க்க வைத்த அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிறந்த சைக்கோ கொலைகாரர்.  50 ஆயிரம் டாலர்கள் விலைவைத்து போலீஸ் பிடித்தபோது முன்னாள் கப்பல்படை மற்றும் போலீஸ்காரர் எனத் தெரியவந்தது. சாக்ரமென்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜோசப்.
 
Dennis Rader (1945-)
நான்கு குழந்தைகள் பெற்ற, வாரம்தோறும் சர்ச்சுக்கு செல்லும் அம்மாஞ்சி ஆசாமி. ஆனால் உள்ளே பிடிகே எனும் சித்திர
வதைக் கொலைகாரர். போலீஸ், பத்திரிகைக்கு கடிதம் எழுதிவிட்டு துப்பாக்கியோடு கிளம்பியவர் 1974-91 வரை பத்துபேரைக் கொன்றார். 2005 இல் பிடிபட்டு சிறையில் களி தின்கிறார்.
   
Gary Ridgway (1949-)  
விலைமாதுக்கள், மைனர் பெண்களை போட்டுத்தள்ளிய கொலைகாரர். அமெரிக்காவின் அக்மார்க் குடிமகன். 82-98 காலகட்டத்தில் 71 நபர்களை கோமாவில் தள்ளி கொன்றவருக்கு பிணங்களோடு உறவுகொள்ளும் விநோதபுத்தியும் உண்டு. காடுகளில் பிணங்களை புதைத்து வைத்தவர் 2001 ஆம் ஆண்டு போலீசில் மாட்டினார்.