அரசு நிறுவனத்திற்கு திறனில்லையா?



பிரான்ஸ்,  இந்தியா ரஃபேல் விமானத்தயாரிப்பு விவகாரத்தில் அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கலுக்கு தயாரிப்பு திறன் கிடையாது என ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்திருந்தார்.
உண்மையில் திறனற்றதா HAL அரசு நிறுவனம்? 

கடந்த ஆண்டைவிட 3.86% வருமானம் அதிகரித்து இவ்வாண்டில் மட்டும் ரூ.18 ஆயிரத்து 284 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கையிலுள்ள ஆர்டர்களின் மதிப்பு ரூ.61 ஆயிரத்து 123 கோடி.  

2015 ஆம் ஆண்டு கிடைத்த 108 ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் பணியும் கைவிட்டுப்போனது. ரூ. 8 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான 40 விமானங்களை (LCA Tejas Mark -1) தயாரிக்கும் பணி 5 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்க காரணம் டிச.2013 ஆம் ஆண்டு அரசு அனுமதிக்காகக் காத்திருந்தது தான். வடிவமைப்பு சான்றிதழைப் பெறவும் தாமதமாகியுள்ளது.  

ரூ.15 ஆயிரத்து 180 கோடி மதிப்பில் 44 விமானங்களை தயாரிக்கும் பணி மூன்றாண்டு தாமதம். ஆதார பொருட்களும், ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவிகளும் கிடைக்காததே காரணம். இதோடு ஜாகுவார் 3 (61 விமானங்கள்), மிராஜ் 2000 (51 விமானங்கள்) தயாரிப்பும் தாமதமாகியுள்ளன.