பிட்ஸ்!*பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து அறுவை சிகிச்சை மருத்துவர் ஜார்ஜ் மேரிவெதர், அட்டைப்பூச்சி மூலம் காலநிலையை கணிக்க முயற்சித்தார். 1851 ஆம் ஆண்டு இதற்கான பரிசோதனையில் தோல்வி யைத் தழுவினார்.
 
*Unfriend  என்ற ஆங்கில வினைச்சொல் 1659 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது.
 
*லீகோ என்ற பெயர் டேனிஷ் மொழிச்சொல்லாக leg godt என்பதிலிருந்து வந்தது. பொருள், நன்கு விளையாடு.
 
*எழுத்தாளர் பேட்ரிசியா ஹைஸ்மித் 300 நத்தைகளை பெட் விலங்காக வளர்த்து வருகிறார். பார்ட்டிக்கு போனாலும் அவற்றை தன் பேக்கில் பார்சல் செய்து கொண்டு செல்வாராம்.
 
*கத்தரிக்காய்கள் கொட்டையில்லாத பெர்ரி வகையைச் சேர்ந்தவை.
 
*1916 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 8,851 கி.மீ தூரத்தை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சுற்றிவந்த சாதனையை முதல்முறையாக வான் புரேன் சகோதரிகள் செய்தனர்.