ஆல்டைம் ஹிட்!Mad Max

ஆஸ்திரேலிய இயக்குநர் ஜார்ஜ் மில்லர் 1979 ஆம் ஆண்டு இயக்கிய மேட் மேக்ஸ் படவரிசையில் இதுவரை 4 படங்கள் வெளியாகியுள்ளன. மெல்கிப்சன் நடிப்பில் வெளியான இருபடங்களும் (1981-85) மாஸ் வெற்றிகண்டன.  2015 ஆம் ஆண்டு டாம் ஹார்டி, சார்லிஸ் தெரோன் அதகள நடிப்பிலும், துல்லிய சிஜியிலும் வெளியாகி 6 அகாடமி விருதுகளை இத்திரைப்படம் வென்றது.

Indiana Jones

1981 ஆம் ஆண்டு தொடங்கி திரைப்பட ரசிகர்களைக் கட்டிப்போட்ட சாகச திரைப்பட வரிசையை(4) ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும், ஜார்ஜ் லூகாஸும் உருவாக்கினர். தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஹாரிசன் போர்டின் எதார்த்த நடிப்பும் கணிக்கமுடியாத திருப்பங்களும் படத்திற்கு பலம். 2008 ஆம் ஆண்டு ரிலீசான படம் மட்டுமே சுமார் விமர்சனங்களைப் பெற்றது.

Harry Potter

எழுத்தாளர் ஜே.கே.ரோலிங்கின் நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட பத்து ஹாரிபாட்டர் படங் களில்(2001-2011) எட்டு படங்களின் வசூல் 7.7 பில்லியன் டாலர்கள். இதனை அடியொற்றி ஃபென்டாஸ்டிக் பீஸ்ட் படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.