எதிர்கால தொழில்நுட்பங்கள்!



விண்வெளி விமானங்கள்!

விண்வெளி எதிர்கால வீடாகும்போது ட்ரோன்கள்தான் பணியாளர்கள். நாசா இப்போதே விண்கலத்தில் செயல்படும் ட்ரோன்களை தயாரிக்க வடிவமைப்பாளர்களை கோரியுள்ளது.
 
ஹைப்பர்லூப் ரயில்!

ஜெட்விமான வேகத்தில் ரயிலில் சென்னையிலிருந்து கோவை செல்வது டெஸ்லா, பேபால், ஸ்பேக்ஸ் நிறுவனங்களின் ஆராய்ச்சி மூலம் சாத்தியமாகலாம். ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் பயணிப்பது எதிர்கால பிளான். 7.5 மணிநேர பயண நேரத்தை 35 நிமிஷமாக குறைக்கலாம்.

உயிரி எரிபொருள் காஃபி!

கா ஃபி உற்பத்தி மூலமாக ஏற்படும் கழிவுகளின் அளவு  இங்கிலாந்தில் மட்டும் 2 லட்சம் டன்கள். இதனைக் குறைக்க உயிரி எரிபொருளாக (ஆர்தர் கே-பயோபீன்) பயன்படுத்தும் திட்டம் சோதனை முறையில் உள்ளது.  
 
நெருப்பை அணைக்கும் ஒலி!  

அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக மின்பொறியியல்துறை ஆராய்ச்சியாளர்கள் சேத் ராபர்ட்சன், வியட் ட்ரான் ஆகியோர் காட்டுத்தீயை ஒலி அலைகள் மூலம் அணைக்கும் கருவியைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். ஒலி அலைகள் நெருப்பு எரியக் காரணமான ஆக்சிஜனை தடைசெய்து அதனை தடுப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.