உன் சமையலறையில்!



Julie & Julia (2009)  
அமெரிக்காவில் கால்சென்டரில் பணிபுரியும் ஜூலி போவெல் (ஏமி ஆடம்ஸ்), ஜூலி சைல்ட் (மெரில் ஸ்ட்ரீப்) என்ற சமையற்கலைஞரின் ரெசிபி நூலைப் படித்து செய்து பார்த்து அதனை தன் வலைத்தளத்தில் எழுதுகிறார். சைல்ட், போவெல் என்ற இருபெண்களின் சமையல் ஆர்வத்தை இத்திரைப்படம் அற்புதமாக காட்சிப் படுத்தியிருந்தது.

Ratatouille (2007)  
ரெமி என்ற எலி பிரெஞ்சு சமையல்கலை நிபுணரின் நூலை அடியொற்றி, சிறந்த சமையல் கலைஞராவதுதான் கதை. டிஸ்னியின் பிக்ஸார் கலைஞர்களின் உழைப்பில் சிறந்த  அனிமேஷனுக்கான அகாடமி விருது வென்ற படம் இது.
 
No Reservations (2007)
கேட் ஆர்ம்ஸ்ட்ராங், பிரபல  உணவகத்தின் தலைமை செஃப். ராணுவ ஒழுங்குடன் அதனை நடத்துபவள் கோபக்காரி. அவளுடைய குழுவில் புதிதாக இணையும் நிக் பால்மர் அனைவரையும் ஈர்க்க, கேட்டுக்கும் நிக்குக்கும் ஈகோ போர் உருவாகிறது. இறந்த சகோதரியின் மகள் ஜோவை வளர்க்கும் பொறுப்பும் கேட்டின் தலையில் விழ குடும்பத்தையும் வேலை யை காப்பாற்ற என்ன செய்தாள் என்பதே கதை.