பிட்ஸ்!



*எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் தனது முதல் நாவலை ஒரு பெண்ணால் எழுதப்பட்டது என எழுதி அச்சிட்டார்.
 
*1974 ஆம் ஆண்டு Journal of Applied Behavior Analysis என்ற இதழில் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் எழுத்து தடுமாற்றம் குறித்த கட்டுரை வெளியானது. ஆனால் அதில் தலைப்பு தவிர்த்து எதுவும் எழுதப் படாமல் காலியாக விடப்பட்டிருந்தது.
 
*க்யூப் வடிவ ஆபீஸ் தனது வடிமைப்புக்காக அப்பெயரை பெறவில்லை. அதன் மூலமானலத்தீன் வார்த்தை Cubiculam என்பதற்கு படுக்கை அறை என்று பெயர்.
 
*வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதியை நினைத்து பயப் படுவதற்கு Paraskavedekatriaphobia  என்று பெயர்.
 
*கூஸ்பம்ப்ஸ் நாவலை எழுதிய எழுத்தாளர் ஆர்.எல்.ஸ்டெய்ன், அதற்கு முன்பு பசூகா எனும் சூயிங்கம் நிறுவனத்திற்கு ஜோக்குகளை எழுதி வந்தார்.
 
*சிறிய எழுத்தாக i எழுதும்போது அதன் மேலே வைக்கும் சிறிய புள்ளிக்கு டிட்டில்(tittle) என்று பெயர்.