போலந்தின் எழுச்சி!பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவுடன் கிழக்கு ஐரோப்பாவிலுள்ள செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகள் இணைந்தன. பொருளாதாரத்திற்காக தனது வாசல்களைத் திறந்து வைத்துள்ள 3 நாடுகளின் வார்சா, புதாபெஸ்ட், பிராக் ஆகிய நகரங்கள் சுற்றுலாவிற்கு பிரபலமானவை. ஆனாலும் முன்னேற்றத்தில் பின்சீட்டிலேயே உள்ளன.   

பெரிய பொருளாதார நாடான போலந்து TSI திட்டம் மூலம் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், எரிவாயு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் போலந்து  ஐரோப்பாவுக்கு எதிராக நிற்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்பகுதிகளில் ரஷ்யா இழந்த செல்வாக்கைப் பெறும் ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளது.  

டிஎஸ்ஐ திட்டத்தின் மூலம் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் வலுப்பெறவிருக்கின்றன. முன்னாள் கம்யூனிச வழியில் நடைபோட்ட 11 நாடுகளுடன் பனிரெண்டாவதாக ஆஸ்திரியா இணைந்து டிஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்தவிருக்கின்றது.

பால்டிக், அட்ரியாட்டிக், கருங்கடல் ஆகிய கடல் பகுதிகளை இணைத்தும், கர்பாடியா, கிளைபேடா, லிதுவேனியா, திசாலோனிகி, கிரீஸ் ஆகிய நாடுகளை சாலைகள் இணைக்கும் திட்டம் முக்கியமானது. இதோடு குரோஷியாவுடன் இணைக்கும் எரிவாயு திட்டமும் ரஷ்யாவின் எரிவாயுவை நம்பியுள்ள நிலையை மாற்றும்.