2028 :நமது உணவு என்ன?1928  ஆம் ஆண்டுக்கு முன்பு  பபுள்கம்,  ஐஸ்க்ரீம் என்றால் யாருக்கும் தெரியாது. 1930 ஆம் ஆண்டின் பிற்காலத்திலும் ஐஸ்க்ரீம்கள் அறிமுக மாயின. 1800களில் ஸ்காட்லாந்து மருத்துவர் ஜோசப் லிண்ட், எலுமிச்சைப்பழங்களை உணவில் பயன்படுத்தினால் ஸ்கர்வி நோயைத் தடுக்கலாம் என்ற கண்டுபிடிப்பினால், எலுமிச்சை பழங்கள் கடல் பணியாளர் களுக்கு  ரேஷனில்  வழங்கப்பட்டன.   

ஒருவரின் உடல் சர்க்கரையை அதிகரிப்பதில் மாவுப்பொருட் களுக்கு பெரும் பங்குண்டு. 2015 ஆம்ஆண்டு 800 பேர்களுக்கு செய்த ஆய்வில் சிலருக்கு ஐஸ்க்ரீம் (அ) அரிசி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை உயருவது  தெரியவந்தது. அடுத்த பத்தாண்டுகளில் உடல்நலனுக்கான பரிந்துரை ஒவ்வொரு வரின் உள்ளுறுப்புகளின் இயற்பியல், மரபணுக்களைப் பொறுத்து மாறும்.
 
டிஎன்ஏ உணவு!  

“உங்களுடைய டிஎன்ஏவைப் பொறுத்து நீங்கள் சாப்பிடும் காய்கறிகள், பழங்களைப் பரிந்துரைப்பது ஈஸி” என்கிறார் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப்ரி ப்ளூம்பெர்க். தற்போதே குறிப்பிட்ட சத்துக்களுடன் பழங்கள், காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கிவிட்டனர். வாழைப்பழத்தில் விட்டமின் ஏ சத்துக்களை இணைக்கின்றனர். உகாண்டாவில் இம்முறையில்  ஊட்டச்சத்துக் குறைவைப் போக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
 
அபாய நீரிழிவு!  

சோளத்தில் மெத்தி யோனைன், கேரட்டில் கால்சியம், அரிசி - உருளைக்கிழங்கில் புரதம் ஆகிய சத்துக் களைச்  சேர்த்து ஆராய்ச்சி யாளர்கள் உருவாக்கத் தொடங்கியுள்ளனர். அலர்ஜி உருவாக்காத வேர்க்கடலை, சோயா ஆகியவற்றை தயாரிப்பது அடுத்த சோதனை. சூழலுக்குகந்த ஆர்கானிக் பால், இறைச்சி ஆகிய வற்றின் தயாரிப்பும் சோதனையும் அடுத்த இடத்தில் உள்ளன. இன்று உலகில் 40 சதவிகிதத்தினருக்கு உடல்பருமன், நீரிழிவு பிரச்னை உள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுகளிலுள்ள உப்பு, சர்க்கரை அளவைக்  கட்டுப்படுத்தி கலோரியினைக் குறைத்தால் மட்டுமே உடல்பருமன் பிரச்னை யிலிருந்து ஒருவர் வெளியேறமுடியும்.
 
ஸ்மார்ட் கிச்சன்!

எதிர்காலத்திற்கான  சமையலறையும் படு ஸ்மார்ட்டாக  மாறத்தொடங்கி யுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த மோல்லி ரோபாட்டிக்ஸ் ரோபாட்டிக்ஸ்
கிச்சனை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. ரெசிபி கேட்டலாக்படி உணவுகளை மனிதர்களின் அசைவுகளை 129 சென்சார்கள் மூலம் காப்பியடித்து ரோபோ நமக்கான உணவை தயாரிக்கும்.  இதற் கடுத்து 3டி பிரிண்டர் வருகிறது. இதில் பீட்ஸா உள்ளிட்ட உணவுப்பொருட்களைக்கூட தயாரிக்க முடியும்.