அறிவோம் தெளிவோம்!



இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் 24-38% மருத்துவ நிதி ஒதுக்கீடு குறைந்துபோயுள்ளது. 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் தேசிய சுகாதாரத்திட்டம்(NHM) உருவாக்கப்பட்டது. தொலைதூர கிராமங்களில் சுகாதாரத் திட்டங்களை வலுவாக்க மாநில அரசுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, சரிவர செலவழிக்கப்படவில்லை என்கிறது சிஏஜி அறிக்கை.   

24 மாநிலங்களில் விட்டமின் ஏ, கருத்தடை மாத்திரைகள், உப்பு-சர்க்கரை கரைசல் (ORS)பாக்கெட்டுகள் உள்ளிட்டவை சரியாகக் கிடைப்பதில்லை. 28 சதவிகித துணை சுகாதார நிலையங்கள் கிராமத்தினர் அணுக முடியாத சூழலிலும், இதில் 17 சதவிகிதம் தூய்மையற்ற சூழலிலும் உள்ளன. 

பீகார், ஜார்க்கண்ட், சிக்கிம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு 50 சதவிகித தட்டுப்பாட்டு உள்ளது. இதில் பீகாரில் உச்சமாக 92% பற்றாக்குறை உள்ளது.  

ரத்தஅழுத்தமானி, தெர்மாமீட்டர், பிரசவ பொருட்கள், எடைமெஷின், பாரசிட்டமால், நாடாப்புழு ஒழிப்பு, இரும்புச்சத்து மாத்திரைகள் ஆகியவை சுகாதார நிலையங்களில் ஆஷா பணியாளர் அவசியம் வைத்திருக்கவேண்டியவை. பீகார், சத்தீஸ்கர், கேரளா உள்ளிட்ட பத்து மாநிலங்களில் இன்னும் மேற்சொன்ன அடிப்படை பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தடுமாறிவருகிறார்கள்.