தொற்றுநோய் அதிகரிப்பு!



ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் ஆறுமாதத்தில் மட்டும் 41 ஆயிரம் பேர் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 37 பேர் பலியாகியுள்ளனர்.  

கடந்தாண்டு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 23, 927 (2017), 5,273 (2016) ஆக இருந்தது. தடுப்பூசி முறையாகப் பயன்படுத்தாததால்  தொற்றுநோய்கள் தீவிரமாகியுள்ளன என்கிறது மருத்துவர்கள் வட்டாரம். மூளை அழற்சி, நிமோனியா, மஞ்சள் காமாலை,  இருமல், தும்மல் மூலம் தட்டம்மை உள்ளிட்ட நோய்கள் அதிவேகமாகப் பரவுகின்றன.

இதற்கு எம்எம்ஆர் தடுப்பூசி சிறந்த பயனை அளிக்கிறது என்றாலும் இந்த ஆராய்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. ஐரோப்பாவின் உக்ரைன், செர்பிய நாடுகளில தொற்றுநோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இத்தாலியில் கட்டாய தடுப்பூசி சட்டம் விலக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாத பெற்றோர்களுக்கு இனி அரசு அபராதம் விதிக்க முடியாது.