காகிதச்சட்டம் காப்பாற்றுமா?



துனிசியாவில் நடைமுறையிலுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் எழுபது எண்பதுகளில் வந்த தமிழ்சினிமாவை நினைவுபடுத்தும். கற்பழித்த பெண்ணை அதே ஆண் மணம் செய்து கொண்டால் சிறைத் தண்டனை கிடையாது எனும் காருண்யத்தை துனிசியா அரசு பெண்களுக்கு வழங்குகிறது. 48% பெண்கள் துனிசியாவில் வன் முறையால் பாதிக்கப்பட்டுள்ளது 2010 ஆம் ஆண்டு அரசின் தேசிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

“காகிதத்தில் மட்டுமே சிறப்பாக எழுதப்பட்டுள்ள பெண்களுக்கான சட்டம் துனிசியாவின் சிறப்பு” என்கிறார் மனித உரிமை கண்காணிப்பக ஆராய்ச்சியாளர் ஆம்னா குலேலாலி.  

ஏடிஎஃப்டி(ATFD-Tunisian Association of Democratic Women) எனும் பெண்களுக்கான அமைப்பு  பெண்களுக்கு  எதிரான வன்முறைகளை எதிர்த்து மக்களை ஒருங்கிணைத்து போராடி வருகிறது.

“பெண் களுக்கு எதிரான வன்முறை வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளே, திருமணத்தில் வன்முறை சகஜம் என்று கூறினால் அவர் களின் தீர்ப்பு எப்படியிருக்கும்?” என்கிறார் வழக்குரைஞரான ஹாயட் ஜாஸர். அரசு சட்டத்தை அறிவித்தாலும் நடைமுறைப் படுத்துவதற்கான நிதியை இது வரையிலும் ஒதுக்கவில்லை.