கூகுளுக்கு அபராதம்!



உலகில் 77 சதவிகித போன்களை ஆளும் ஆண்ட்ராய்டு நிறுவனமான கூகுள், ஐரோப்பாவில் செய்த விதிமீறலால் 5.1 பில்லியன் டாலர்களை ஐரோப்பிய நீதிமன்றத்தில் அபராதமாகக் கட்டவுள்ளது.
ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸை பயன்படுத்தும் போன் தயாரிப்பாளர் களிடம்  கூகுள்  தேடுபொறி மற்றும் உலாவியை கட்டாயமாக இன்ஸ்டால் செய்ய  உத்தரவிட்டு விதிகளை மீறியதுதான் பிரச்னை. கடந்தாண்டு கூகுள், போட்டி யாளர்களின்  நிறுவனங்களை  பின்தள்ளி காட்டிய தேடுதல் முடிவு களால் 2.4 பில்லியன் டாலர் களை அபராதமாகக் கட்டியது.  

இவ்வாண்டில் இதுவரை கூகுள் 24.5 பில்லியன் டாலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது. அபராதத் தொகையான 5.1 பில்லியன் என்பது கூகுளின் 18 நாட்களுக்கான வருமானம். உலகின் சந்தையில் ஆண்ட்ராய்டின் போட்டியாளரான ஆப்பிள் 19%, மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 0.4% பங்குகளைப் பெற்றுள்ளன. “கூகுள் தனது ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸை தனது தேடுபொறி வணிகத்திற்கு ஆதாரமாகப் பயன்படுத்தி போட்டியாளர்களின் கண்டுபிடிப்புகளைத் தடுக்கிறது” என்கிறார் அபராதம் விதித்த நீதிபதியான மார்கரிதே வெஸ்டாகர்.