முத்தாரம் நேர்காணல்



போராடுவதற்கு மாற்றாக துப்பாக்கியையா தூக்க முடியும்?

டெல்லியில் கவர்னர் மாளிகையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் ஆகியோர் செய்த ஒரு வாரகால உண்ணாவிரத தர்ணா இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. ஐஏஎஸ் அதிகாரிகள் பணிசெய்யவில்லை என்பதே டெல்லி முதல்வரின் தர்ணாவுக்குக் காரணம். 
அர்விந்த் கெஜ்ரிவாலின் பழைய பாணி தர்ணா போராட்டம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே?  அமைதிவழி போராட்டத்திற்கு சாதாரண மனிதனிடம் வேறு என்னதான் வாய்ப்பிருக்கிறது, சொல்லுங் களேன்?
 
உங்களை எப்படி பொதுமனிதராக அடையாளப்படுத்துவீர்கள்?  

எங்களுக்கு வேறு வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் துப்பாக்கியைத் தூக்க முடியுமா? கவர்னரைச் சந்திக்க நேரம் கேட்டோம். சந்திக்க மறுத்ததோடு காத்திருப்பு அறையிலிருந்த எங்களைத் தொடர்ந்து புறக்கணித்தார். விக்டோரியா ராணி காலத்தில் சுதந்திரப் போராட்டக்காரர்களைக் கூட ஆங்கில கவர்னர் சந்தித்திருக்கிறார். இப்போது எங்களை சந்திப்பதில் கவர்னருக்கு என்ன தயக்கம்?
 
உங்களது போராட்டத்திற்கு கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் உங்களை அவர்கள் சந்திக்க கவர்னர்  அலுவலகம்  மறுக்கிறது என புகார் கூறுகிறீர்களே?  

கவர்னர் அலுவலகம் தனிப்பட்டவரின் சொத்து அல்ல. வரிகட்டும் மக்களுக்கு சொந்தமானது. நாங்கள் யாருடைய தனிப்பட்ட சொத்தையும் ஆக்கிரமித்ததாக நீங்கள் குற்றம்சாட்ட முடியாது.
 
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்ற மறுப்பதாக ஆம் ஆத்மி குறைகூறுகிறது.

அதிகாரிகளின் நம்பிக் கையை டெல்லி அரசு இழந்துவிட்டதாகக் கூறலாமா?  

எங்களுடன் பணிபுரியும் 90 சதவிகித அதிகாரிகள் மிகச் சிறந்த செயல்திறன் உடையவர்கள்தான். ஆனால் இந்திய அரசால்  தொடர்ச்சியாக பணிமாற்ற அச்சுறுத்தல்களுக்கு உள்ளானால் எப்படிஅவர் கள் நிம்மதியாக வேலை செய்வார்கள்? ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியின்றி அரசு பள்ளிகளை நாங்கள் எப்படி நடத்தமுடியும்?
 
மூத்த செயலரான அன்சு பிரகாஷ், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அவரைத் தாக்கியதாக புகார் கூறியுள்ளார். உங்கள் தரப்பு உண்மையை ஐஏஎஸ் சங்கத்தில் கூறியிருக்கலாமே?  

முதல்வர் அர்விந்தும், நானும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியைத் தாக்க உத்தரவிட்டிருப்போம் என்று நினைக்கிறீர்களா? அந்த இடத்தில் நானும் இருந்தேன் என்ற வகையில் அன்சு பிரகாஷின் புகார் தவறானது என்பதை அறிவேன்.  நாங்கள் அதை ஏற்கப்போவதில்லை.
 
ஊழல் எதிர்ப்பு இயக்கமாக இருந்து அரசியல் கட்சியாக மாறிய ஆம் ஆத்மி, பாஜகவுக்கு ஆதரவாக மென்மையாகச் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறதே?  

அடிப்படையற்ற மோசமான குற்றச்சாட்டு. அர்விந்த் கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காங்கிரஸ் எங்களைப் பார்த்து பயந்து, தன் கருத்துநிலை தடுமாறி இதுபோல பேசிவருகிறது.
 
முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், டெல்லியை ஆண்டபோது இதுபோன்ற பிரச்னைகள் எழவில்லை என்பதோடு அர்விந்த் கெஜ்ரிவாலின் நிர்வாகத்திறனையும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளதைப் பற்றி உங்கள் கருத்து?  

 மோடி  அரசு 2015  ஆம் ஆண்டு டெல்லி மாநில அரசின் அதிகாரங்களைக் குறைத்துவிட்டது. இன்று டெல்லி முதல்வர் தன் ஆபீசிலிருந்து ஒரு புறா வைக் கூட இடம்மாற்ற அதிகாரமில்லை. அந்த அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உண்டு.
 
ஆட்சியின் சாதனைகள்?  

மொகல்லா மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், மலிவான விலையில் மின்சாரம், தனியாக வாழும் பெண்களுக்கு சான்றிதழ் பெறுவதையும் எளிதாக்கியுள்ளோம். பணமதிப்புநீக்கம் மூலம் பொருளாதாரத்தை அழித்த வேகத்தில் மோடி எங்கள் கட்சியையும் அழிக்க நினைக்கிறார்.

நன்றி: பர்கா தத், தி வீக்.