குப்பைகளை அகற்றும் விண்கலம்!



விண்வெளியிலுள்ள குப்பைகளை அகற்றும் லட்சியத்திற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த Remove DEBRIS எனும் பெயரிலான திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைத்து செயல்படுத்தவிருக்கிறது.  இங்கிலாந்து SSTL விண்வெளி ஏஜன்சி நூறு கிலோவிலான ரிமூவ் டெப்ரிஸ் என்ற விண்கலத்தை குப்பைகளை சேகரிக்க அனுப்பிவைக்க உள்ளது.

“இத்தொழில்நுட்பம் வெற்றிபெற்றால் விரைவில் அனைத்து திட்டங்களிலும் ரிமூவ் டெப்ரிஸ் இணைக்கப்படும்” என்கிறார் சர்ரே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குக்லையல்மோ அக்லைட்டி. எஸ்எஸ்டிஎல் எனும் இதனை ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த விண்கலத்திலுள்ள அதிநவீன கேமராக்களும் சென்சார்களும் விண்வெளியிலுள்ள குப்பைகளைக் கண்டறிந்து துல்லியமாகவும் வேகமாகவும் அதனை சேகரித்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.