உலகைக் காப்பாற்றுமா இமோஜி?இமோஜி, உலகைக் காப்பாற்றும் என்று சொன்னால் பல் முளைக்காத குழந்தை கூட ஹவ்? என்று கேட்கும். எமர்ஜென்சியில், குறிப்பாக நிலநடுக்க காலங்களில் நிலப்பரப்பு வேறுபாடு கடந்து உதவுவது இமோஜிகள் மட்டுமே என ஆராய்ச்சியாளர்கள் கூறுவதோடு அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இதனை யூனிகோட் முறையில் அமைக்கவும் லாபி செய்து வருகின்றனர்.

“மூன்றில் ஒரு சதவிகித நாடுகள் நிலநடுக்க ஆபத்துக்குள்ளாகும் அபாயத்தைக் கொண்டுள்ளன. அனைத்து நாடுகளிலும் மொழிப் பிரச்னையின்றி எச்சரிக்க இமோஜி சரியான தீர்வு” என்கிறார் சவுத்தாம்டன் பல்கலையைச் சேர்ந்த நில அதிர்வு வல்லுநர் ஸ்டீபன் ஹிக்ஸ். Emoji-quake பிரசாரத்தை உலகெங்கும் செய்து வருகிறார் ஸ்டீபன். நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போல வெளித் தெரிந்து நடப்பதில்லை.

 திடீரென நடைபெறுவது என்பதால் இமோஜி மூலம் உடனடியாக எச்சரித்து உயிர் களைக் காக்கலாம். emerji என்ற பெயரில் சூழல் பிரச்னைகளைச் சொல்லும் இமோஜிகளை சாராடீன் என்ற அமெரிக்க கிராபிக் டிசைனர் உருவாக்கியுள்ளார். பல்வேறு இமோஜிகளை இணைத்து செய்தி பரிமாறு வதில் தடுமாற்றங்கள் உள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.