என் தேசம் க்யூபா!



THE OTHER SIDE OF PARADISE: LIFE IN THE NEW CUBA BY JULIA COOKE

க்யூபாவின் ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியின் கீழ் க்யூப மக்களின் தினசரி வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் படைப்பு இது. க்யூப  
வரலாறு, விபசாரத் தொழில், சாண்டிரியா மதம் என பல்வேறு விஷயங்களை நேர்முகங்கள் மூலம் வாசகர்களுக்கு புரிய வைக்கிறார் ஆசிரியர்.

CUBA ON THE VERGE: 12 WRITERS ON CONTINUITY AND CHANGE IN HAVANA AND ACROSS THE COUNTRY, EDITED BY LEILA GUERRIERO

க்யூப வரலாற்றை பனிரெண்டு எழுத்தாளர்கள்(ஆறு க்யூப குடிமகன்கள், ஆறு வெளிநாட்டவர்கள்) புட்டு வைக்கும் நூல். க்யூப பத்திரிகையாளர் ஆப்ரஹாம் ஜிம்னெஸ் எனோவா இந்நூலை தொகுத்துள்ளார். பேஸ்பால் காதல், எல்லை பிரச்னைகளால் கலைந்த உறவு கள் என மனிதநேய பக்கங்களையும் பேசுகிற புத்தகம் இது.
 
FROM CUBA WITH LOVE: SEX AND MONEY IN THE TWENTY-FIRST CENTURY BY MEGAN DAIGLE

வழிகாட்டி, உள்ளூர் மக்கள், சகபயணிகள் அனைவருக்கும் க்யூபாவில் எச்சரிப்பது விபச்சாரம் குறித்துதான். க்யூப மக்களுக்கும் வெளிநாட்ட வருக்குமான விபசார உறவு எப்படி உருவாகி வளர்ந்தது என உண்மைக்கு மிக அருகில் ஆராய்ச்சி செய்து மேகன் எழுதியுள்ள நூல்.