3டி பேட்டரி!



கேதோடு ஒருபுறமும் அனோடு ஒருபுறமும் அமைந்து பெரும்பாலான பேட்டரிகள் இருக்கும். தற்போது 3டி சுருள் டிசைனில் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள பேட்டரி அதிவேகமாக சார்ஜ் செய்யும் திறனில் உள்ளது.இதற்கு முன்னர் இவர்கள் உருவாக்கிய பேட்டரி கிராபீன் மூலமும், தற்போதைய தயாரிப்பு மெல்லிய கார்பன் பொருட்கள் கொண்டும் உருவாகியுள்ளது.

PEDOT எனும் பாலிமரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. “புதிய 3டி வடிவம் மின்சார இழப்பு பிரச்னையைத்  தீர்க்கும். தற்போதைய பேட்டரியை விட மின்சாரத்தை கிரகிக்கும்  ஆற்றலும்  3டி பேட்டரியில் அதிகம்” என்கிறார் ஆராய்ச்சியாளரான உல்ரிச் வைஸ்னர். தற்போது இந்தத் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறும் முயற்சி நடைபெற்று வருகிறது.