கய் லாம்ஸ்டேஸ்



பசுமை பேச்சாளர்கள் 54

இங்கிலாந்தைச் சேர்ந்த கய் லாம்ஸ்டேஸ் சூழலியல் சார்ந்த கண்டுபிடிப்பாளர். இவர் ஃபிரிட்ஜில் உள்ள குளிர்விக்கும் சக்தியை சேமிக்கும்விதமான கருவியைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்றார்.

இக்யூப் எனும் இவரின் கருவி, ஃபிரிட்ஜிலுள்ள வெப்ப நிலையைக் கணித்து திறக்கும்போதும் மூடும்போதும் குளிர்விக்கும் கருவியை அணைத்து விடுகிறது. இதன் மூலம் மின்சாரம்  மிச்சமாவதோடு,  சூழலுக்கு கேடான வாயுக்களின் அளவையும் கட்டுப்படுத்தலாம். இக் கருவி மூலம் ஓராண்டுக்கு கட்டுப்படுத்தப்படும் கார்பனின் தோராய அளவு 17 ஆயிரம் டன்.

ஜியா ஸாங்கே

சீனாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான ஜியா, 2006 ஆம் ஆண்டு தான் எடுத்த ஸ்டில் லைஃப் படத்திற்காக கோல்டன் லயன் விருது வென்றார். சீனாவில் கோர்கெஸ் அணையில் மின்சாரம் எடுக்கும் திட்டத்திற்காக அங்கு குடியிருந்த பல லட்சம் மக்களை அரசு இடம்பெயரச்சொல்லி உத் தரவிட்டதே கதை மையம். ஊழல், மாஃபியா, நிலம் கையகப்படுத்தல் ஆகியவற்றை  இப்படம்  கவனப்படுத்தியிருந்தது.

 1970 ஆம் ஆண்டு பிறந்த  இயக்குநர் ஜியா, தன் படத்தில்  தனிமையில் அலையும் இளைஞர்கள், உலகமயமாக்கலின் விளைவுகள், சூழல் பிரச்னைகளைத் தொடர்ந்து கதையில் முக்கியமாக கதாபாத்திரங்களாக ட்சிபடுத்துகிறார்.

தையுவான் பல்கலையில் கலைப் படிப்பு படித்தவரை Yellow earth என்ற திரைப்படம் சினிமா பக்கம் திருப்பியது. முழுநீள திரைப்படங் களுக்கு நிகராக ஆவணப் படங்கள், குறும்படங்கள் எடுப்பது என திரைப்படங்களில் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என செயல்பட்டு வருகிறார் ஜியா.

பன்கர் ராய்

இந்தியாவில் தொடக்க கல்வி இல்லாதவர்களுக்கு கல்வியளிக்கும் விதமாக Barefoot எனும் பெயரில் கல்லூரி தொடங்கியவர் பன்கர் ராய் (1945). ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவைச்சேர்ந்த மக்களுக்கு மரபான அறிவுடன் கல்வியை அளிப்பதே பன்கரின் திட்டம். பசுமை  திட்டங்களைக் கற்றுத்தந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பொறியாளர், கட்டிட வல்லுநர்கள், ஆசிரியர்களாக மாற்றியுள்ளார் பன்கர்ராய்.

தான் உருவாக்கிய சமூக ஆராய்ச்சி மையம் மூலம் கல்விப்பணியை முன்னெடுத்து தற்சார்பான சமூகத்தை உருவாக்க முயற்சித்தது பன்கர்ராயின் முக் கியப்பணி. 1986 ஆம் ஆண்டு தன் சமூகப்பணிக்காக பத்ம ஸ்ரீ விருது வென்ற ஆளுமை இவர்.

ச.அன்பரசு