நீதிபதிகளின் விக்!



ஆங்கிலப்படங்களில் தலை வழுக்கையாகாத நீதிபதிகளும் கூட முள்ளங்கி  உடலில்  பொருந்தாத  விக்கை  அணிந்து  தீவிரமாக  தீர்ப்பு எழுதுவார்கள். நீதிபதிகளின் தலையில் விக் வைக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது? இங்கிலாந்து மன்னர் மூன் றாம் எட்வர்டு காலத்தில் (1327-1377) நீண்ட அங்கியுடன் நீதிமன்றத்தில் கலந்துகொள்வது மரபு.

பாதிரிமார்களும், பிஷப்புகளும் அங்கி களோடும், தொப்பிகளோடும் இருப்பது தொன்மைக் காலத்தை நினைவுறுத்தும் பழக்கம்தான். எர்மைன் எனும் வெண்ணிற இழை அல்லது டஃபீடா  செயற்கை இழை அல்லது பட்டு ஆகியவை அங்கிகளாக அணிய மன்னரால் தேர்ந்தெடுக்கப்பட்டன.

1635 ஆம் ஆண்டு வரை இவ்விதிகளே நீதிபதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. 1680 வரை விக்குகள் இன்றி போஸ் கொடுக்கும் நீதிபதிகள், பதினேழாம் நூற்றாண்டில் மன்னர்  இரண்டாம் சார்லஸினால் விக் அணிய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

முதலில் எதிர்த்த  நீதிபதிகள் பின்னர் ஏற்க, 1760 ஆம் ஆண்டு நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பிஷப்புகள் ஆகியோர் விக்கை பெருமையாகவும்  கர்வமாகவும் அணியத் தொடங்கினர். 1800 இல் இதனை பிஷப்புகள் கைவிட, இறுதியாக நீதிபதி களும் அதனை வழிமொழிந்து, குறிப்பிட்ட அரசு  சார்பான நிகழ்வுகளில் மட்டுமே அணிகின்றனர்.