ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு!ஆணுறை, குடும்பக்கட்டுப்பாடு ஆகிய பழையமுறைகள் உங்களுக்குப் பிடிக்க வில்லையா? இதற்காகவே ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தைக்  கண்டுபிடித்துள்ளனர். இம்மருந்து ஆண்களின் ஹார்மோனை பாதிக்காமல் கருவுறுதலைத் தடுக்கிறது என்பதுதான் இதன் ஸ்பெஷல்.

அல்ட்ரா ஒலியலைகள், ஜெல் மூலம் விந்தணுக்களை அழிப்பது  ஆகியவற்றைக்  கடந்து EP055 எனும் மருந்தை யுஎன்சி  சாப்பல் ஹில் மற்றும் ஓரேகான் அறிவியல்  மற்றும்  உடல்நல  பல் கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இம்மருந்து  விந்தணுக்களின்  வேகத்
தை மட்டும் மட்டுப்படுத்துகிறது.

“விந்தணுக்கள் மிதக்கும் வேகத்தை மட்டுப் படுத்தி கருத்தரித்தலைத் தவிர்க்க இம் மருந்து உதவுகிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஓ ராண்ட். விலங்குகளுக்கு செய்த சோதனையில் மருந்து முப்பது மணி நேரங்களுக்கு வீரியமாக இருந்தது.

மூன்று வாரங்களுக்குள்ளாகவே விந் தணுக்களின் தன்மை இயல்பு நிலைக்கு மீண்டுவிட்டது. “ஆண்களின்  உடலில்  பதினெட்டு  நாட்களுக்குப்  பிறகு   உடலிலுள்ள விந்தணுக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்கிறார் ஆராய்ச்சியாளரான மேரி ஜெல்லின்ஸ்கி. விரைவில், ஆராய்ச்சிக்குப்  பிறகு சந்தைக்கு இம்மருந்து விற்பனைக்கு வரும்.