இந்தியாவின் கனவு!



ஸ்டார்ட்அப் மந்திரம்

இன்றைய ஜென் இசட் இள சுகளின் சுயதொழில் மந்திரம் என்ன? சிம்பிள் ஸ்டார்ட் தொழில் முயற்சிகள்தான். முதலில் சிறுதொழிலாக கைக்காசை போட்டு தொழில் தொடங்கியவர்களை பார்த்திருப்போம். இன்று ஸ்டார்ட்  அப்களுக்கு  அரசு மானியம்  அளித்து உதவி வருகிறது. இப்பகுதியில் தொழில் முயற்சிகள், அதன் பிளஸ், மைனஸ், தோல்விகள், கற்றுக்கொண்ட பாடங்கள் என அனைத்தையும் பார்க்கப் போகிறோம்.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று விக்ஞான் பவனில், பிரதமர் மோடி  தொடங்கி  வைத்த  தொழில்முனைவு  திட்டம் ஸ்டார்ட்அப் இந்தியா. இன்று வரை ஸ்டார்ட்அப் பயிற்சிக்கு பதிவு செய்துள்ளவர்களின் அளவு 1 லட்சத்து 97 ஆயிரத்து 469. இன்று வரை(மார்ச் 5,2018) தொடங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப்கள் 7ஆயிரத்து 775. அதில் அரசின் நிதிஉதவி பெற்ற ஸ்டார்ட்அப்கள் 97.

2015 ஆம் ஆண்டு பிரதமர் செங்கோட்டையில் அறிவித்த திட்டம் இது. தொடங்கியது அடுத்த ஆண்டு. எதற்கு இந்த புதிய திட்டம்? இளைஞர்களின் தொழில் கனவுகளுக்கு சிறகு கொடுக்கத்தான். லைசென்ஸ் தாமதம், சூழல் அனுமதி, அந்நிய முதலீடு, நிலக் குத்தகை ஆகிய பிரச்னைகளிலிருந்து விடுவிக்க அரசின் DIPP (The Department of Industrial Policy and Promotion) துறை உதவுகிறது.

என்ன விதிமுறை?

25 கோடிக்கும் குறைவான லாபம் இருக்கவேண்டும். ஸ்டார்ட் அப்புகள் தொடங்க தொழிலில் ஏழு ஆண்டுகள் அனுபவம் தேவை. குறைந்த வட்டியில் கடன் தர முதலீடாக 200 பில்லியன் டாலர்கள் அரசு கொண்டுள்ளது. மேலும் அரசின் ஐமேட் நிகழ்வும், முத்ரா வங்கியின் நிதியுதவியும் திட்டத்தின் ஸ்பெஷல்.

ஸ்டார்ட்அப் என்றால் என்ன? புதிய பொருளை, சேவையை வழங்கும் நிறுவனத்தின் தொடக்க நிலை. கூட்டாகவோ, தனியாகவோ தொடங்கிய நிறுவனம் தன் பொருளை, சேவையை மேம்படுத்தும் ஸ்டேஜில் இருக்கும்.

இதில் முதலீடும் உடனே வந்து குவிந்துவிடாது. ஐடியாவை பல்வேறு கார்ப்ப ரேட் நிறுவனங்களை அசத்தும்படி அமைத்தால் ஸ்டார்ட்அப் மார்க்கெட்டில் பிழைக்க ஆக்சிஜனாக நிதி கிடைக்கும். இவ்வாரம் வாசிக்க வேண்டிய நூல்: The Power of Habit by Charles Duhigg. Entrepreneurial Skill Habit Forming.

(உச்சரிப்போம்)