புத்தகம் புதுசு!




A Feast of Science: Intriguing Morsels
from the Science of Everyday Life
by Joe Schwarcz
240 pages
ECW Press
சர்க்கரை உடலுக்கு நல்லதா, புற்றுநோயை தீர்க்க நுண்ணுயிரிகள் உதவுமா, தக்காளியில் மீனின் மரபணுக்கள் பயன் படுத்தப்படுகிறதா என எக்கச்சக்க கேள்விகளுக்கு மருத்துவர் ஜோ விடையளித்து வாசகர்களின் பதற்றம் தணிக்கிறார். தினசரி வாழ்வில் வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும் விளக்கம் தருவது சிறப்பு.
   
Not That Bad: Dispatches from
Rape Culture
by Roxane Gay
368 pages
Harper
இன்றைய உலகில் முன்னெப்போதையும் விட பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் சம்பளப் பாகுபாடு, வல்லுறவு, வன்முறை ஆகிய நோய்க்கூறுகள் பற்றி ஏமி ஜோ பர்ன்ஸ், லிஸ் லென்ஸ், கிளாரே ஸ்வார்ட்ஸ், நடிகர்கள் ஆலி ஷீடி, கேப்ரியல் யூனியன் ஆகியோர் தம் கருத்துக்களை கட்டுரையாக எழுதியுள்ளனர். பாலின பாகுபாட்டால், வல்லுறவு விஷயங்களால்  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூகத்தில் வாழ தைரியம் தரும் படைப்பு இது.