புத்தகத்தை காணோம்!



இன்று புத்தகத்தை களவாடிச் செல்பவர்கள் குறைவு. அந்த இடத்தை  ஸ்மார்ட்போன்களும், பவர்பேங்குகளும் பிடித்து விட்டன. ஆனால் மத்திய காலங்களில் ஐரோப்பாவில் நூலகங்களில், கடைகளில் நூல்களை திருடுவது என்பது  விலையுயர்ந்த காரை திருடுவது போல. எழுத்தாளர்கள் புத்தகத்தை திருடுபவர்களுக்கு என்னென்ன சாபம் கொடுத்தார்கள் தெரியுமா?

பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள 1172  ஆண்டுகால  அர்னெஸ்  டைன் பைபிளில்” இந்த நூலை திருடுபவர்களுக்கு நிச்சயம் மரணம் உண்டு. காய்ச்சல், தொழுநோயால் பாதிக்கப்படு வார்கள். வாணலியில் வறுக்கப்பட்டு இறப்பார்கள். அல்லது தூக்கிலிடப்படுவார்கள்” என்று மிரட்டலாக ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டுள்ளது.

வாட்டிகன் நூலகத்திலுள்ள ட்ரோகின் என்பவரின் பதிமூன்றாம் நூற்றாண்டு நூலில், புத்தகங்களை திருடுபவர்களுக்கு கண், உயிர் போகும். கிறிஸ்துவின் கருணை கிடைக்காது என சாபமிடப்பட்டுள்ளது. பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த The Medieval Book  என்ற நூலை எழுதிய பார்பரா சைலர், தன் நூலை  யாரேனும்  திருடினால் அவர்களுக்கு கிறிஸ்துவே இறுதித் தீர்ப்பு நாளில் தண்டனை தருவார் என எழுதி அருளியுள்ளார்.