இந்தியர்களின் சைஸ் சர்வே!அண்ணாச்சி கடைகளில் தற்போது நாம் வாங்கி அணியும் ஆடைகள் அனைத்தும் இந்தியர்களுக்கான ஆடை அளவைக் கொண்டதல்ல. விரைவில் இந்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி(NIFT) சர்வே ஒன்றை நடத்தி 25 ஆயிரம் இந்தியர்களை ஆய்வுக்குள்ளாக்கி 3டி வடிவில் அவர்களின் உடல் அளவை கணக்கிட்டு இந்தியர்களின்  சைசிற்கான சார்ட் ஒன்றை  அமைக்கவிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு நிஃப்ட் செய்ய நினைத்த ஐடியா இது.

“இந்த  ஆய்வின்  திட்ட மதிப்பு 30 கோடி. 15-65 வயது வரையிலான  நபர்களின் அளவு களை  சேகரிக்கவிருக்கிறோம். இதில்  ஆண்கள் மற்றும் பெண் களின் அளவு சமமாக   இருக்கும்”  என்கிறார் நிஃப்ட்  இயக்குநர்  சாரதா முரளிதரன். ஆய்வுக் காலம் 3 ஆண்டுகள்.  உயரம், எடை,  இடுப்பு அளவு ஆகியவை  பெறப்பட்டு தகவல்தளத்தில் சேமிக்கப்படவிருக்கிறது.

கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பெங்க ளூரு, ஷில்லாங் ஆகிய நகரங்களில் விரைவில் சர்வே 3டி ஸ்கேனர் உதவியுடன் தொடங்கும். ஜவுளித்துறை அமைச்சகம் 21 கோடியும் நிஃப்ட் 9 கோடியும் செலவழித்து இந்த ஆய்வை செயல்படுத்துகின்றன.