ரஷ்யாவே வெளியேறு!அமெரிக்கா, தன் நாட்டிலுள்ள அறுபது ரஷ்ய அதிகாரிகளுக்கு தம் குடும்பத்துடன் ஆறுநாட் களுக்குள் வெளியேற கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த பதினெட்டு நாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய அதிகாரிகள் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. காரணம்  இங்கிலாந்திலுள்ள தன் முன்னாள் உளவாளியை ரஷ்யா கொல்ல முயற்சி  செய்ததால்தான்.

இதற்கு உதவிய நான்காம் தலைமுறை வேதிப்பொருளான நோவிசோக் (Novichok) கை சோவியத் யூனியன் கண்டுபிடித்தது. ஆர்கனோபாஸ்பேட் எனும் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வேதிப்பொருள் உரவகை களில் பயன்படுகிறது.
 
உடலுக்குள் நோவிசோக் உள்ளே செல்லும்போது நரம்பு   மண்டலத்தின் என்ஸைம்களி லுள்ள புரதத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக, உடல் உறுப்புகளுக்கும் மூளைக்கும் உள்ள தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு  மரணம் நேருகிறது. இந்த நச்சுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உளவாளி செர்ஜெல் கிரிபால் வாயில் வெண்ணிற நுரை வெளியேறுவதோடு, அவரது  மகள்  யூலியாவின்  கண்கள் வெண்ணிறமாக மாறிவிட்டன.

ரஷ்ய  அதிகாரிகள் தம்  நாட்டை  உளவு பார்க்கின்றனர் என்ற அச்சத்தினால் உலக நாடுகள்  அவர்களை வெளியேற்ற திட்டமிட்டு வருகின்றனர். அதிபர் புடின் அதிபரானபின் சந்திக்கும்  பெரும்  பின்னடைவு இது.