டாட்டூ மம்மி!



பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள பதப்படுத்தப்பட்ட மம்மிகளின் உடல்களில் காளை, செம்மறி ஆடு உள்ளிட்ட விலங்கு களின் உருவங்கள் டாட்டூவாக வரையப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கி.மு. 3351 - 3017 காலகட்டத்தைச்  சேர்ந்த  மம்மிகளான இவை, டாட்டூ வரலாற்றையே மாற்றியமைத்துள்ளன.

“5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவில் டாட்டூ  கலாசாரம்  இருந்தது என்பது நம்பமுடியாத ஒன்று” என ஆர்வமாகப் பேசுகிறார்  டேனியல் ஆன்டைன். ஆண் மம்மி கெபலெய்ன், ஏறத்தாழ உலகிலேயே மிகச்சிறந்த முறையில் பதப்படுத்தப்பட்ட உடலைக் கொண்டுள்ளது. முதுகில் குத்திக் கொல்லப்பட்டுள்ள இந்த ஆண் மம்மி, கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

காளை மற்றும் ஆடு என்பது வலிமையின் குறியீடு எனவும், பெண் மம்மியின் உடலில் எஸ் வடிவ குறியீடுகள் இருந்ததையும் குறிப்பிடுகின்றனர். டாட்டூ என்பது பொதுவானது என்றாலும் புதிய கண்டுபிடிப்பாக  மிகச்சிறந்த  முறையில் பதப்படுத்தப்பட்ட மம்மிகளில் அவை  இடம்பெற்றுள்ளது  பற்றி ஆய்வை தொடர்ந்துவருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.